பூட்டு மாநகர் திண்டுக்கல்லில் புதியதோர் உதயம் ...ஜாப்மேக்கேர்ஸ் அகாடமி TNPSC, UPSC, SSC, BANKING, RRB, TRB, TNUSRB,LIC ,ENGINEERING SERVICES..வித்தியாசமான கல்வி முறை , செயல்முறை விளக்கங்களுடன் பாடத்திட்டம் , தரமான புத்தகங்கள் , ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் , கனவு கல்வி திட்டங்களுடன் புதிய உதயம் .....மார்ச் 4 முதல் புதிய வகுப்புகள் ஆரம்பம்: GROUP 2 NEW BATCH..பாஸ் பண்ணவில்லை எனில் பணம் வாபஸ்

தகவல்கள்

டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும்இரண்டு புதிய பைக்குகள்....


டிவிஎஸ் நிறுவனம் நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது.இந்நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள ஓசூர், கர்நாடகாவில் உள்ள மைசூரு மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள நலகர்க் ஆகிய மூன்று இடங்களில் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. நடப்பு ஆண்டில் உற்பத்தியை மேலும் துரிதப்படுத்த எண்ணியுள்ள இந்நிறுவனம் இதற்காக 500 கோடி ரூபாயை தனது உற்பத்தி தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய உள்ளது.அந்த வகையில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் இரண்டு மாடல்களில் ஒன்று ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் மாடலான ‘அப்பாச்சி ஆர்டிஆர் 310 ' பைக்காக இருக்கலாம் என்று தெரியவருகிறது.இந்த பைக்கானது டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘பிஎம்டபிள்யூ ஜி 310ஆர்' பைக்கில் உள்ள அதே இஞ்சின் கொண்டிருக்கும்.
இந்தியாவில் இந்நிறுவனங்களின் கூட்டணியில் வெளிவர இருக்கும் முதல் மாடலாகவும் டிவிஎஸ் ‘அப்பாச்சி ஆர்டிஆர்310' பைக் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் ரூ.1.6 லட்சம் முதல் ரூ.1.7 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் 2017ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2017ன் துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது.

இரண்டு பைக்குகளும் ஒரே இஞ்சின் கொண்டிருக்கும், இவை இரண்டிற்குமான வித்தியாசம் தோற்ற அளவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் உலக சந்தைகளில் 500சிசிக்கும் குறைவான இஞ்சின் கொண்ட பைக் பிரிவில், உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்காக பிஎம்டபிள்யூ மோட்டோரேட் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கை கோர்த்தன.

No comments:

Post a Comment

ஜாப் மேக்கேர்ஸ் தமிழ்

ஜாப்   மேக்கேர்ஸ்   தமிழ் பிளாக்கர் , தமிழ்மொழியில் வேலை வாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் நோக்குடனும் , எப்படி உடனடி ...